Monday, August 21, 2017

“தளிர்”...!!! சிறுகதை..,!!

    



கோடாரியை கீழே போட்டு நெற்றி வியர்வையை வழித்து விட்டான் வாசன். வெட்டிப்போட்ட மரங்களை இரண்டாக வகுந்து கொண்டிருந்தார்கள். தொழிலாளர்கள்.,

மாணிக்கம் லாரியில்,எல்லாத்தையும் ஏற்றி அனுப்பிடணும். வேலையாட்களிடம் மரங்களை அடுக்கி, தார்ப்பாழ் கொண்டு மூட சொன்னான்.,
அதிகாலையிலிருந்து, மதியத்திற்குள் ஒன்பது மரங்களை.., சாய்த்திருந்தான்.
     முதலாளி கிட்டே, அடுத்தமாத சம்பளத்தையும் சேர்த்து கேட்கணும். வசுந்தராவுக்கு எப்போ பிரசவ வலி..., வரப்போகுதோ தெரியல..,மருத்துவ செலவுக்கு உதவும்..!!மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

வசுந்தரா மேடான வயிற்றை தூக்கியபடி நடந்தாள். குழந்தை, வந்தனாவின் டிபன்பாக்ஸில் உணவை அடைத்துக்கொண்டாள். வெளியே வந்தாள்.வெயில் வியர்வை ஊற்றை பெருக்கி விட்டது. வேகமாக நடக்கலானாள்..!

    எப்படியோ குழந்தை வந்தனாவுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வரும்போதுமனம் லேசாகி போனது. நிறைமாத வயிறு மட்டும்கனத்துக் கிடந்தது. “ச்சே என்ன வெயில்.குடையாவது எடுத்து வந்திருக்கலாம்.” நாக்கும் வறண்டுபோனது. வெயிலுக்கு ஒதுங்க ஒரு இடமும் இல்லையா..,?? கண்களை மேய விட்டாள்.

   அதோ.., அங்கே ஒரு சோலை.., பூங்காவை பார்த்ததும் எட்டி நடை போட்டாள் வசுந்தரா. பூங்காவுக்குள், நுழையும்போது கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. நா, வறட்சியோடு, இடுப்பு வலியும் சேர்ந்து , ஆ.., அம்மா அலறியபடி மயங்கி சரிய.., பூங்காவில் நின்றவர்கள் ஓடி வந்தனா். அவளை நோக்கி..,

 கைப்பேசி அழைக்க.., எடுத்த வாசன் அதிர்ந்தான்.

அவசரமாக மருத்துவமனைக்குள் நுழைந்தவனிடம்.. அங்கே நின்றிருந்த பெண்கள் சொன்னார்கள். “அந்த பொண்ணு பூங்கா வாசலிலே மயக்கம் போட்டு விழுந்திடிச்சி. இங்கே மட்டும் வராம.., ரோடு பக்கத்திலே விழுந்திருந்தா, அடிக்கிற வெயிலுக்கு என்னவோ ஆகியிருப்பா..,!

எந்த புண்ணியவான் நட்ட மரங்களோ..,அந்த வெயிலிலேயும்.., காற்றையும், குளிர்ச்சியையும் தந்திட்டு இருக்கு. வெயிலோட அருமை நிழலிலே தெரியும்பாங்க. அவங்களை.., ஆசுவாசப்படுத்தி உங்க நம்பரை கேட்டு உங்ககிட்டே தகவல் சொன்னோம்.
உடனே.., ஆம்புலன்ஸ் வரவழைத்து, இங்கே சேர்த்தோம். இன்னும் பத்து நிமிசத்திலே குழந்தை பிறந்திடும்.  டாக்டர் சொன்னாங்க..,என்ற பெண்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டான் வாசன்.

“அந்த பொண்ணோட வந்தவங்க யாருங்க’..,?“ஆண் குழந்தை.., பிறந்திருக்கு.” உள்ளே இருந்து குரல் வர..,  பாய்ந்து உள்ளே ஓடினான்.
கையில் தந்த.., குழந்தையை வாங்கும்போது.., கைகள் நடுங்கியது. மரங்கள், வெட்டி,வெட்டி.., காய்ப்பேறிய கைகளைப் பார்த்தான்..!
குழந்தைக்கு உறுத்தக்கூடாதே.., தன் தலையில் கட்டியிருந்த, துண்டை எடுத்து குழந்தையை வாங்கினான்.!!

சில நாட்கள் கழித்து.., வசுந்தராவோடும்,குழந்தையோடும்  தன் வீடு நோக்கி பயணிக்கையில் பூங்காவை பார்த்தான்.

   பாலையிலும்.., சோலையாய்.., அந்த பூஞ்சோலை சிரித்தது.  அந்த சாலையில், நடந்தவர்கள் ஓய்வெடுக்க., குழந்தைகள் விளையாட..,சிறு குழந்தைகள் நடைபயில.., உற்சாகமாய் உடற்பயிற்சி செய்ய.., ஒரு உலகமே இயங்கி கொண்டிருந்தது.

எத்தனை மரங்களை முறித்திருப்பேன். முடமாக்கி இருப்பேன். இந்த மர நிழல் தான் நேற்று என் வசுந்தராவை காப்பாற்றி இருக்கிறது.இனி என் வாழ்க்கை முழுக்க, நான் செய்த தவறுக்கு..,பரிகாரமாக  புது மரங்களை நடவு செய்து..,  இந்த ஊரையே பூங்காவாக்க போகிறேன்..,!!

தீர்மானமாய் முடிவெடுத்தவன்.., தன் கையில் சிரித்த தன் தளிரைப் பார்த்து முறுவலித்தான்.!!

           உமா நாராயண், (குமரி உத்ரா)                        


சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...